CalendarPg

நலத்திட்ட உதவி பெறுவதற்கான : வருமான உச்சவரம்பு அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவுசெய்தவர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் திருமண செலவுக்கு அரசு சார்பாக உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆண்களுக்கு ரூ.3 ஆயிரமாகவும், பெண்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது.

அதேபோல, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினருக்கு மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி, வீட்டுமனைப் பட்டா ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT