TNadu

தமிழக அமைச்சரவை : நவ.19-ல் கூடுகிறது :

செய்திப்பிரிவு

தமிழக வெள்ளபாதிப்பு நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவ.19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டாவில் பயிர் பாதிப்பை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அனுப்பிஅறிக்கை பெற்று நிவாரணம் அறிவித்துள்ளார். இதர மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தர வேண்டி உள்ளது. இதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நவ.19 மாலை 5 மணிக்கு முதல்வர் தலைமையில் கூடுகிறது.

SCROLL FOR NEXT