வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு பணி யில் ஈடுபட்டார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டி வனத்துறை அலுவல கத்தில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, அமைச்சர் தலைமை வகித்தார்.
“சில இடங்களில் வனவிலங்கு களால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கு அரசின் நிதியுதவியை அதிகாரிகள் உடனுக்குடன் பெற்றுக் கொடுக்க வேண்டும். வன நிலங்களில் செய் துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூட்டத்தில் அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில், மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வனஅலுவலர்கள் கவுதம் (சேலம்), ராஜாங்கம் (நாமக்கல்), சுதாகர் (சமூக காடுகள்), வனப்பொறியாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பாராட்டு