Regional01

மூதாட்டியை காப்பாற்றிய : தலைமைக் காவலருக்கு ஆணையர் பாராட்டு :

செய்திப்பிரிவு

கொளத்தூரைச் சேர்ந்த அம்சா (89), கடந்த மாதம் 23-ம் தேதி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து அம்சாவின் சேலையில் தீப்பற்றியது. அருகில், பணியில் இருந்த செம்பியம் காவல்நிலைய தலைமைக் காவலர் பி.செந்தில்குமார், தீயை அணைத்து, மூதாட்டியைக் காப்பாற்றினார். இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர் செந்தில்குமாரை பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

SCROLL FOR NEXT