கண்டாச்சிபுரம் அருகே க.பில்ராம்பட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியர் மோகன். 
Regional01

கண்டாச்சிபுரம் அருகே - பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியர் :

செய்திப்பிரிவு

கண்டாச்சிபுரம் அருகே க.பில்ராம் பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வளாகம், வகுப்பறை, சமையலறை, மற்றும் கழிவறை உள்ளிட்டவை தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா? குடிநீர் சுகாதாரமான முறையில் உள்ளதா? நடப்புகல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை பள்ளி தலைமையாசிரியர் ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்து வழங்க வேண்டும்.

மதிய உணவில் முட்டை, கொண்டைக்கடலை உள்ளிட் டவைகள் தவறாமல் வழங்கிடு வதை தலைமையாசிரியர் கண்காணித்திட வேண்டும். நாள்தோறும் பள்ளி வளாகம், வகுப்பறை, சமையலறை, கழிவறை, மாணவர்கள் அமரக்கூடிய இருக்கைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும் என்று ஆட்சியர் அப்போது அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆட்சியர் மோகன், மாணவர்களிடம் கேள்விகள் கேட்டறிந்து சரியாக பதில் அளித்த மாணவ, மாணவிகளுக்கு எழுதுப்பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி பாராட்டினார்.

பாடங்களை நன்கு கற்று, சமுதாயத்தில் உயர் பதவிகளுக்கு சென்றிட அறிவுரை வழங்கினார்.

பின்னர் க.பில்ராம்பட்டு, நாயனூர் கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT