Regional02

எல்லீஸ்நகர் நடைபாதை கடைகளை : 4 வாரங்களுக்குள் அகற்ற கெடு : உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

எல்லீஸ்நகர் நடைபாதை கடை களை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் பிரத்தியேக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் எல்லீஸ்நகர் பஸ் நிறுத்தம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந் தது. வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகை யில், மாநகராட்சியால் அங்கீக ரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக எல்லீஸ்நகர் பகுதியில் கடை நடத்தி வருகின்றனர். இதனால் கடை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றார்.

இதையேற்க மறுத்து, எல்லீஸ் நகர் நடைபாதைக் கடைகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

SCROLL FOR NEXT