Regional02

மதுரை இரட்டை கொலையில் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

மதுரை அருகே திண்டியூர் கண்மாய் கரையில் கடந்த வாரம் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

ஒத்தக்கடை போலீஸார் விசாரணையில் அவர்கள் மதுரை மதிச்சியம் செல்லப் பாண்டி (25), அவரது நண்பர் திருச்சி சிங்காரவேலு (25) எனத் தெரிந்தது.

இதுதொடர்பாக கருப்பா யூரணி அருகிலுள்ள ஓடைப் பட்டியைச் சேர்ந்த பாலு என்ற பல்லு பாலுவை காவல் ஆய்வாளர் ஆனந்த தாண் டவன், எஸ்ஐகள் குமரகுரு, கார்த்திக் தலைமையிலான தனிப்படையினர் நேற்று பிடித்தனர்.

2018-ல் கருப்பாயூரணியில் செல்லப்பாண்டிக்கும், பாலு கோஷ்டிக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. இது குறித்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக இரு தரப்பினரும் கடந்த சனிக்கிழமை திண்டியூர் கண்மாய் கரைப்பகுதியில் சமரசம் பேசியுள்ளனர். அப் போது, ஏற்பட்ட தகராறில் செல்லபாண்டியும், அவரது நண்பரும் பாலு கோஷ்டி யால் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், சிலரை தனிப்படையினர் தேடு கின்றனர்.

SCROLL FOR NEXT