Regional01

அரசு கல்லூரியை மாற்ற எதிர்ப்பு; தரகம்பட்டியில் கடையடைப்பு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் கடந்தாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தரகம்பட்டியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் அரசு கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைக் கண்டித்தும், தரகம்பட்டியிலேயே கல்லூரியை கட்ட வலியுறுத்தியும் தரகம்பட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊர் முக்கியஸ்தர்கள் கே.பி.மாரியப்பன், பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தரகம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேதவள்ளி, கீழப்பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT