எம்பவர் இந்தியா நுகர்வோர், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் கடந்த 28.08.2017 அன்று இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குறை தீர்ப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டுமென அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் கடந்த 06.08.2021 அன்று தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அலுவலகம் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் குறைதீர்ப்பாளர்கள் நியமனம் குறித்த பத்திரிக்கை விளம்பரத்தை வெளியிட்டது. ஆனால் விளம்பரம் வெளியிடப்பட்டு 3 மாதங்களாகியும் குறை தீர்ப்பாளர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு உடனடியாக தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குறை தீர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.