வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று மணப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள வர்மாஆயுர்வேதா மருத்துவமனையில் நடைபெறுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைபெறுகின்றன. மணப்பாக்கத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஆயுர்வேத டாக்டர் கவுதமன் தலைமை தாங்கி, பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு நோய்கள்அறுவை சிகிச்சை இன்றி குணமாக்கப்படுகின்றன. முதுகுத் தண்டுவட வலிகள், மூட்டுவலிகள், சைனஸ் பிரச்சினைகள், ஆஸ்துமா,சிறுநீரகக்கல், உறுப்பு செயலிழப்பு, கருமுட்டைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குடல் இறக்கம் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’என்றார். மேலும் தொடர்புக்கு 9500946631.