விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மனுக்கள் எழுதிக்கொடுக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர். 
Regional01

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் - இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம்ஆட்சியர் அலுவல கத்தில் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளிக்கின்றனர். இம்மனுக்களை ஆட்சியர் மோகன் நேரடியாக பெறுகிறார். பொதுமக்களுக்கு மனு குறித்த நிலையும் தெரிவிக்கப்படுகிறது. இம்மனுக்களை எழுதி கொடுக்கும் சிலர் குறைந்தபட்சம் ரூ.100 முதல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெறுகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க நேற்று முதல் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த எழுத படிக்க தெரிந்த பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் நேற்று கோலியனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 6 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

இதே போல கடந்த ஆண்டு நேரு யுவகேந்திரா இளைஞர்கள் சில வாரங்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் இப்பணி முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. நேற்று தொடங்கப்பட்ட இப்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

SCROLL FOR NEXT