Regional02

அல் அமீன் பள்ளிக்கு : நூல்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) நிறுவனம் சார்பில் மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 68 நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.அதனை பன்னூலாசிரியர் அ.க.அ.ஸூபைர் ஸய்யிதி, பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.ஷேக்நபியிடம் வழங்கினார்.

அதில், மக்கள் திலகம் மனதில் மஹாத்மா, நாட்டியக் குதிரை, திரு.வி.க. தமிழ் இலக்கிய முன்னோடி, எண் பதுகளில் தமிழிலக்கிய வளர்ச்சி, செம்மொழி தமிழில் சீரிய வளர்ச்சி, இருபதாம் நூற்றாண்டில் சென்னை, 90-களில் தமிழ் சினிமா, கோமாளி யாக்கப்பட்ட மன்னன் முகமது பின்துக்ளக் உள்பட 68 நூல்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT