அந்தியூர் - பர்கூர் சாலையில் நேற்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், சாலையின் ஒரு பகுதி சேதமானது. இதனால், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 
Regional01

அந்தியூர் - பர்கூர் சாலையில் மீண்டும் மண் சரிவு : வாகனப் போக்குவரத்துக்கு தடை

செய்திப்பிரிவு

அந்தியூர் - பர்கூர் சாலையில் நேற்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் சாலையில், முதல் கொண்டை ஊசி வளைவு அருகே செட்டிநொடி என்ற இடத்தில்மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் காலை மண்சரிவு ஏற்பட்டது. இதனால், தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்கள், மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.பிரபாகர், சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.

சாலையில் விழுந்த பெரிய பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், காலை 11 மணி அளவில் அதே பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதில், சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து, அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இந்த சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT