Regional02

கழிவு நீரோடையில் விழுந்தவர் மரணம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் விஜயன் (37). அதிமுக பகுதி இளைஞரணி செயலாளராக இருந்தார். 2 நாட்களுக்கு முன்பிருந்து விஜயனை காணவில்லை. உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி கழிவு நீரோடையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கழிவு நீரோடையில் தவறி விழுந்து விஜயன் இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT