வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த நரிக்குறவர்கள். 
Regional01

பட்டா வழங்க நரிக்குறவர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷிடம் நரிக்குறவர்கள் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “திரு வண்ணாமலை அருகே உள்ள கொண்டம் காரியந்தல் பகுதியில் நரிக்குறவர்கள் வசிக் கிறோம். எங்களது தாத்தா மற்றும் தந்தை குடும்பத்துக்கு என கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 35 வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு, அடுத்த தலைமுறைகள் உருவானதால், அந்த பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஒரு சிறிய வீட்டில் 3 முதல் 5 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறோம்.

இடநெருக்கடியால் அவதிப்படுகிறோம். பாசி மணி மற்றும் ஊசிமணி விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம். திருவண்ணாமலையை நம்பி வாழ்ந்து வருவதால், வெளியூர்களில் குடிபெயர்ந்து செல்லவும் முடியாது. இடநெருக் கடியில் உள்ள எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT