Regional01

விஏஓ அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் நவம்பர் 16-ம் தேதி (இன்று) திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ், மின்னணு குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை பெற விரும்பு வோர் அதற்கான மனுக்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT