Regional02

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் - நகர்ப்புற தேர்தல் குறித்து ஆலோசனை :

செய்திப்பிரிவு

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்ப்புற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டில் நேற்று நடைபெற்றது.

டிசம்பர் மாதம் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற அமைப்புகளுக்கு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நடைபெறவுள்ளது. இதில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு அருகே திருமணியில் மாவட்டத் தலைவர் சூர்ய நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, வாக்காளர் பட்டியல் முகாம்களில் இயக்கத்தினர் பங்கேற்று 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 95 பேர் மனு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் நரேந்திரன், தொண்டரணி மாவட்டத் தலைவர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT