Regional02

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு :

செய்திப்பிரிவு

மாநிலச் செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் ஆணையர் ஜெயசங்கர், உதவித் தேர்தல் ஆணையர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபிரியல் வரவேற்று பேசினார். இதில் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நடந்த மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் சங்கத்தின் மாவட்ட தலைவராக ஜான் போஸ்கோவும், செயலாளராக இளையராஜாவும், பொருளாளராக கலையரசனும், மாவட்ட துணைத் தலைவராக தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளராக சிதம்பரபாரதி ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாலமுருகன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT