Regional01

15 டன் கடத்தல் சுண்ணாம்புக் கல் லாரியுடன் பறிமுதல் :

செய்திப்பிரிவு

வரவணையில் 15 டன் கடத்தல் சுண்ணாம்புக் கல் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வெப்படை, வரவணை பகுதியில் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் இளங்கோவன் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார். அப் போது, அங்குள்ள தனியார் நிலத்திலிருந்து கோலமாவு தயாரிக்கும் தரம் குறைந்த சுண்ணாம்புக்கல் லாரியில் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிந்தாமணிபட்டி போலீஸில் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் கனிமவளங் கள் அழிப்பை தடுத்தல் மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 15 டன் சுண்ணாம்புக் கல்லை லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும், சுண்ணாம்புக் கல்லை கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT