Regional01

மதுரை மல்லிகை விலை உயர்வு :

செய்திப்பிரிவு

மதுரையில் தொடர் மழையால் மல்லிகைப்பூ விலை உயர்ந் துள்ளது. நேற்று கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.

தொடர் மழையால் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தைக்கு மதுரை மல்லிகை வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூ விலை உயரத் தொடங்கி இருக்கிறது.

முகூர்த்த நாட்கள், திருக்கார்த்திகை பண்டிகை ஆகியவை இருப்பதால் மதுரை மல்லிகை நேற்று கிலோ ரூ.1300 ஆக விலை உயர்ந்துள்ளது.

மற்ற பூக்களான பிச்சிப்பூ ரூ.500, முல்லைப்பூ ரூ.700, பட்டன் ரோஸ் ரூ.120, பட் ரோஸ் ரூ.100 அரளிப்பூ ரூ.200, செவ்வந்திப்பூ ரூ.100, செண்டு மல்லிப்பூ ரூ.80, சம்பங்கி ரூ.150 என விற்பனையானது.

SCROLL FOR NEXT