ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional01

சர்க்கரை நோய் வந்தால் அச்சப்பட தேவையில்லை : பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு

செய்திப்பிரிவு

‘‘சர்க்கரை நோய் வந்தால் அச் சப்பட தேவையில்லை,’’ என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் ரெத்தினவேலு தலைமை வகித்தார். கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், ‘‘உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் நாம் கட வுளாக கருதுகிறோம்.

அவர்கள் நமக்கு வரும் நோய்களை தடுக்கவும், நோய் வந்தால் சிகிச்சை அளிக்கவும் செய்கிறார்கள். அதுபோன்றதுதான் சர்க்கரை நோய். இந்த நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும். வந்தால் சிகிச்சை பெற்றால் போதுமானது. இந்த நோயை கண்டு அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT