Regional02

பாலமேடு அருகே பெண் கொலை : காவல் நிலையத்தில் கணவர் சரண்

செய்திப்பிரிவு

மதுரை பாலமேடு அருகே சத்திர வெள்ளாள பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (30). இவரது மனைவி கலைவாணி (27). வீட்டி லிருந்த கலைவாணி நேற்று கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அழகர்சாமி பாலமேடு காவல்நிலையத்தில் சரணடைந்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தவறான நட்பை கைவிடுமாறு மனைவியை அழகர்சாமி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில், கலைவாணியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளுமாறு அழகர்சாமி வலியுறுத்தியுள்ளார். தன் கண் முன்னே தூக்கில் தொங்கியும் மனைவி சாகாததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT