Regional01

மழைக்காலங்களில் மின்சாதனங்களை பாதுகாப்புடன் கையாள அறிவுரை :

செய்திப்பிரிவு

தமிழக அரசின் மின் ஆய்வுத்துறை திருச்சி கோட்ட மின் ஆய்வாளர் ஆர்.சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைக்காலங்களில் சுவிட்ச் போர்டுகள் ஈரப்பதமாக இருக்கலாம் என்பதால், கவனமுடன் கையாள வேண்டும்.

மின் கம்பம், ஸ்டே கம்பியில் கால்நடைகளை கட்டக் கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்ய வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும் போது வெட்ட வெளியிலோ, மரத்தின் அடியிலோ நிற்கக் கூடாது. இந்த நேரத்தில் கான்கிரீட் கூரை அல்லது உலோக கூரை வேயப்பட்ட கார், பேருந்து போன்றவற்றில் தஞ்சமடையலாம். இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை இயக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT