ராசிபுரத்தைச் சேர்ந்த அமமுக மாநில நிர்வாகி ஏ.பி.பழனிவேல் - ஜோதி தம்பதியின் மகன் பி.காமராஜ், டெல்லி எம்.கந்தசாமி-சாந்தி தம்பதியின் மகள் டாக்டர் கே.சத்யா திருமண வரவேற்பு விழா ராசிபுரத்தில் நடந்தது. 
Regional01

ராசிபுரத்தில் அமமுக மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா :

செய்திப்பிரிவு

ராசிபுரத்தில் நடைபெற்ற அமமுக மாநில நிர்வாகி இல்ல திருமண விழாவில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனிவேல் - ஜோதி தம்பதி யின் மகன் பி.காமராஜ், டெல்லி எம்.கந்தசாமி-சாந்தி தம்பதியின் மகள் கே.சத்யா திருமண வர வேற்பு விழா ராசிபுரத்தில் நடந்தது.

மணமகன் காமராஜின் தந்தை நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும், ராசிபுரம் எஸ்.ஆர்.பி.கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், அமமுக மாநில துணைத் தலைவ ராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவரது இல்லத் திருமண விழாவில், அமமுக மண்டல பொறுப்பாளர் மனோகரன், நாமக்கல் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.அன்பழகன், அமமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம், அரூர் முன்னாள் எம்எல்ஏ முருகன், தருமபுரி மாவட்ட அமமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், திமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ. ஆர்.சாந்தி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமமுக தொண்டர்கள் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT