Regional01

கரோனா பணியின்போது இறந்த 5 மருத்துவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கல் :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும்போது தொற்று ஏற்பட்டு இறந்த 5 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்தை ஆட்சியர் அனீஸ்சேகர் வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதில், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த 5 மருத்துவர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்தை ஆட்சியர் அனீஸ் சேகர் வழங்கினார்.

SCROLL FOR NEXT