Regional01

உசிலம்பட்டி குறவக்குடியில் - சிமென்ட் சாலை அமைக்க உத்தரவு :

செய்திப்பிரிவு

உசிலம்பட்டி குறவக்குடியில் 4 வாரங்களுக்குள் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மதுரை உசிலம்பட்டி குறவக்கு டியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

குறவக்குடியில் ஆயிரத் துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

எங்கள் கிராமத்தில் கழிவுநீர் கல்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைத்து தருமாறு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதற்காக இரு தவணைகளில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டபோதும், கடந்த ஓராண்டாக பணிகளை தொடங் காமல் உள்ளனர்.

எனவே, உடனடியாக சிமென்ட் சாலை, கால்வாய் அமைக்க உத்தரவிட வேண்டும் என தெரி வித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 4 வாரங்களுக்குள் குற வக்குடியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT