Regional01

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ ஓட்டுநர் கைது :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரை சேர்ந்தவரின் மகன் (16) மதுரை கீழவாசல் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார்.

கடந்த 10-ம் தேதி சிறுவனின் தந்தை மகனை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதன்படி விடுதியை விட்டு கிளம்பிய சிறுவன் நீண்ட நேரமா கியும் வீட்டுக்கு வரவில்லை. பெற் றோர் சிறுவனைத் தேடியபோது கூடல்நகர் பாலத்துக்கு அடியில் அழுதபடி நின்றிருந்தார்.

விசாரணையில் மதுரை மேல அண்ணாத்தோப்பு வேலு காம்பவுண்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பெருச்சாலிப் பாண்டி என்பவர் சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரி யவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோவில் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT