Regional01

தங்கமயில் ஜூவல்லரியின் 50-வது கிளை மதுரை காளவாசலில் நாளை திறப்பு :

செய்திப்பிரிவு

மதுரையை தலைமையிடமாக கொண்ட தங்கமயில் ஜூவல்லரி, மதுரையில் 3-வது கிளையை (தமிழகத்தில் 50-வது கிளை) காளவாசலில் நாளை திறக்கிறது.

மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் அந்நிறுவன உரிமை யாளர்கள் கூறியதாவது:

1947-ல் பாலுசாமியால் மது ரையில் பாலு ஜூவல்லரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அவருக்கு பின்னர் பா. பலராம கோவிந்ததாஸ், பா. ரமேஷ், பா. குமார் ஆகிய சகோதரர்களின் உழைப்பால் இந்நிறுவனம் வளர்ந்தது. 1991-ல் ஜான்சிராணி காம்ப்ளக்சில் தங்கமயில் என்ற பெயரில் தொடங்கினோம்.

தரமான நகை வணிகத்தால் மக்களின் நம்பிக்கை, ஆதரவை பெற்றோம். தென் தமிழகத்தில் ‘பிஐஎஸ் ஹால்மார்க்’ நகைகளை அறிமுகம் செய்த பெருமை தங்க மயிலுக்கு உண்டு. 2007-ல் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறியது. 2010-ல் பங்குச் சந்தையில் பங்கு களை வெளியிட்டோம்.

தென்னிந்தியாவில் பங்குச் சந்தையில் நுழைந்த முதல் நகைக் கடை எங்களுடையதுதான்.

தமிழகம் முழுவதும் இன்று 50 கிளைகளுடன் நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. 1,500 பணியாளர்கள் உள்ளனர். சிறந்த தரம், பல்வேறு டிசைன்களில் நகைகள், நியாயமான விலை, குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்கிறோம் என்றனர். 

SCROLL FOR NEXT