Regional01

மதுரையில் ஆயுதப்படை காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை :

செய்திப்பிரிவு

விருதுநகர் ஆயுதப்படைப் பிரி வில் பணிபுரிந்து வந்த காவலர், மதுரையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த கனி மகன் கார்த்திக் (30). இவர், விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கரிமேடு போலீஸார், கார்த்திக்கின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT