Regional02

அருப்புக்கோட்டையில் காவலர் தற்கொலை :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்எஸ்பி நகரைச் சேர்ந்தவர் ராஜன் (40). திருச்சுழி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

விருதுநகர் சிபிசிஐடியில் காவலராக கூடுதல் பொறுப்பும் வகித்து வந்தார். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். குடும்ப பிரச்சினையில் இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT