Regional01

இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் - கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 31,448 மாணவ, மாணவிகள் பயன் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்விதிட்டம் மூலம் 31,448 மாணவ, மாணவிகள் பயன்பெறு கின்றனர்.

கரோனா காலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை குறைத்திடும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 100 சதவீதம் மாநில அரசின் நிதி பங்களிப்பில் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 31,448 மாணவ, மாணவியர்கள் பயனடைகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி எஸ்எஸ்ஏ அலுவலக பயிற்சி அரங்கில், ஆசிரியர் களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி நடந்தது. பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்துப் பேசினார். இதில், உதவி திட்ட அலுவலர் நாராயணா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், மேற்பார்வையாளர் சாந்தி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் ஆகியோர் பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆடல் பாடல், கதைகள் மூலம் ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், தன்னார் வலர்களுக்கு பயிற்சி அளித்து, இல்லம் தேடி கல்வி திட்டம் மேலும் சிறப்பாக செயல்பட பணியாற்ற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT