Regional01

இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் செல்லும் மக்கள் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்துக்கான சுடுகாடு நயினார் ஏரிக்கு மறுபுறம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் செல்லும்போது, இங்கு இறந்தவர்களின் சடலங்களை தண்ணீரில் இறங்கி எடுத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது.

தற்போது மழை பெய்து ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை உறவினர்கள் ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சுடுகாட்டுக்கு சிரமத்துடன் தூக்கிச் சென்றனர். இதையடுத்து, சுடுகாட்டுக்கு செல்ல அரசு பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT