திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியின் உடலியக்கவியல் துறையில் உடல் பருமன் குறித்த இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. துறை தலைவரும், நிகழ்ச்சி அமைப்பு செயலருமான டாக்டர் அனிதா குத்துவிளக்கேற்றினார். 
Regional01

மருத்துவ கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியின் உடலியக்கவியல் துறையில், உடல் பருமன் குறித்த இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

துறை தலைவர் அனிதா வரவேற்றார். உடல் பருமனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இணைபேராசிரியர் வாசுகி, வளர்சிதை மாற்ற நோய் அறிகுறி குறித்து பேராசிரியர் ரத்னகுமார், உடல் பருமனில் இரைப்பை குடல் இயக்கம் குறித்து கந்தசாமி, உடல் பருமனில் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து சரவணபூபதி, மகளிர் மருத்துவத்தில் உடல் பருமனால் ஏற்படும் சவால்கள் குறித்து மகப்பேறு மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் பவானிதேவி, உடல் பருமனில் நுரையீரலின் பங்கு பற்றி நெஞ்சக நோய் பிரிவு இணை பேராசிரியர் ஜோசப் பிரதீபன் ஆகியோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT