Regional01

மண்டல தடகளப்போட்டிகள் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட தடகள சங்க செயலாளர் செல்லப்பாண்டியன் போட்டிகளை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 12 வயது முதல் 19 வயது வரையிலான 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியின் முதல் நாளான நேற்று 50, 100, 1500, 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டது.

2-ம் நாளான இன்று நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளின் முடிவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட தடகள சங்க தலைவர் அய்யாத்துரைபாண்டியன் பரிசுகளை வழங்குகிறார்.

SCROLL FOR NEXT