வேலூரில் விடிய, விடிய பெய்த மழையால் கன்சால்பேட்டை பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கப் பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தாக்கத்தால் பல இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திராநகர், திடீர் நகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. பலர் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புடன் வெளியேற்றி கன்சால்பேட்டை உருது தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
கன்சால்பேட்டை பகுதியில் மீட்பு நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியின் கார், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கியது. பின்னர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கார் மீட்கப்பட்டு அந்த சாலை சரி செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலரின் கார் சிக்கிய பிறகு அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கன்சால்பேட்டை, கோரிமேடு, இந்திரா நகர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் தேங்கிய வெள்ள நீர் வெளியேறும் பிரதான கால்வாய், ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய், காகிதப்பட்டரை பகுதியில் உள்ள கால்வாய் வழி யாக மழைநீர் துரிதமாக வெளி யேற பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அடைப்புகளை சரி செய்தனர்.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார், வரு வாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார். கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன் தீயணைப்புத்துறை யினரின் ரப்பர் படகு மூலம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
7 முகாம்களில் 403 பேர்
பள்ளிகொண்டா
உபரி நீர் வெளியேறி பாலாற்றில் கலக்கும் கால்வாய் தூர்வாராததால் தொடர் மழை மற்றும் அதிகளவு உபரி நீர் வெளியேறி பள்ளிகொண்டா காவல் நிலையம் பின்புறம் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ரங்கநாதர் கோயில் அருகில் உள்ள ரங்கநாதர் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்தது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் கால்வாய் தூர் வாரப்பட்ட பிறகே வெள்ள நீர் வெளியேறத் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் மழையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.