மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் 16 கண் மதகு பகுதியில் கடல்போல தேங்கி நிற்கும் தண்ணீர். 
TNadu

மேட்டூர் அணையில் இருந்து - 14,000 கனஅடி நீர் வெளியேற்றம் : நீர்வரத்து விநாடிக்கு 19,146 கனஅடியானது

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 14,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடிக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்துஅதிகரித்த நிலையில், கடந்த 9-ம்தேதி அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 20 ஆயிரத்து 656 கனஅடியாக இருந்த நீர்வரத்துநேற்று காலை 19 ஆயிரத்து 146 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரத்து 263 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 150 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்இருப்பு 91.88 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT