ஈரோடு மாட்டுச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கால்நடைகள். 
Regional02

ஈரோடு மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் நேற்று நடந்த மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடி மதிப்பில் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளைம் காவிரிக்கரையில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திர, கர்நாடகா ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்று மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

நேற்று நடந்த கால்நடைச் சந்தையில், வரத்தும், விற்பனையும் அதிகரித்து இருந்ததால், சந்தை களைகட்டியது. நேற்றைய சந்தையில் 300 பசு மாடுகள், 500 எருமைகள், 200 கன்றுகள் என ரூ.2 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT