பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை கிராமத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா நடவு செய்யப்பட்ட விளைநிலங்களை பாண்டியன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional01

பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் - மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு :

செய்திப்பிரிவு

பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி யில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் கன மழையால் பாதிக் கப்பட்ட பு.முட்லூர், மஞ்சகுழி, பூவாலை ஊராட்சிகளில் பாதிக் கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வன்னி யர் பாளையம் பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட அதிமுக அவைத்தலைவர் குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT