மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் இருந்த தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் கறைபுரண்டு ஓடுகிறது. 
Regional02

பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் மூழ்கியதால் - மரக்காணம் பகுதி கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு :

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே பக்கிங்காம்கால்வாயில் தரைப்பாலம் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை யினால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை மாவட்டத்தில் சராசரியாக 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 97 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மரக்காணம் அருகே உள்ள தேவிகுளம், கோட்டிக்குப்பம், நடுக்குப்பம், ஓமிப்பேர், ஆத்திக்குப்பம், கெளாப்பாக்கம், அடசல் உள்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் புதுச்சேரி, மரக் காணம், சென்னைக்கு செல்ல வேண்டு மென்றால் பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் செல்லவேண்டும். வண்டிப்பாளையம் - ஆத்திக் குப்பம் கிராமங்களுக்கு இடையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் இருந்த தரைப்பாலம் முற்றிலும் மூழ்கிவிட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT