சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவுடன் காணப்படுகிறது. 
Regional03

சங்கராபுரத்தில் உள்ள 14 ஏரிகளும் நிரம்பின : உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளில் சூழ்ந்ததால் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி அணை, மணிமுக்தா நதி அணை, ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 305 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள 14 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. தொடர்மழை காரணமாக ஏரிக்கு வரும் நீர் அப்படியே மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. சில பகுதிகளில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி விளை நிலங்களிலும், குடியிருப்பு பகுதி களிலும் சூழ்ந்துள்ளது.

SCROLL FOR NEXT