Regional02

மரக்கன்று வளர்க்க விவசாயிகளுக்கு மானியம் :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் ரூ.28.39 லட்சம் மதிப்பில் 1,89,300 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இக்கன்றுகளை வனத்துறை நாற்றாங்காலில் இருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். வரப்பு நடவுக்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்கள் என்றால் 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். பராமரிப்பு ஊக்கத் தொகையாக ஒரு கன்றுக்கு ஆண்டுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT