Regional02

இளைஞருக்கு வெட்டு :

செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே மிளகனூரைச் சேர்ந்த ஜோதி முருகன் மகன் காசிராஜன் (20). இவர் மனநலம் பாதித்த சோமநாதன் (45) என்பவரை தலைமுடியை பிடித்து இழுத்து சீண்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சோமநாதன், அரிவாளால் காசிராஜனை வெட்டினார். காயமடைந்த காசிராஜன் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காசிராஜனின் நண்பரான மிளகனூரைச் சேர்ந்த முருகேசன் மகன் நிஷாந்த்குமார் (18), சோமநாதனை வெட்ட அரிவாளுடன் கால் பிரிவு கிராமத்துக்குச் சென்றார். அவரை கிராம மக்கள் பிடித்து மானாமதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT