Regional01

தொழில் தொடங்க 25 சதவீதம் மானியக் கடன் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்க மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில், அதிகபட்சம் ரூ.5 கோடி வரை வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஆர்வம் உள்ளோர், www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT