Regional02

திருத்தலையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து : மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆய்வு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 10 ஆண்டுகளாக வறண்டு கிடந்த 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தலையூர் பெரிய ஏரிக்கு அய்யாற்றில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வரும் வகையில் அண்மையில் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டன. அதன் வழியாக திருத்தலையூர் பெரிய ஏரிக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இதை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ சீ.கதிரவன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் முசிறி மேற்கு ராமச்சந்திரன், முசிறி கிழக்கு காட்டுக்குளம் கணேசன், மண்ணச்சநல்லூர் கிழக்கு விஎஸ்பி.இளங்கோவன், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் மண்ணச்சநல்லூர் கேபிஏ.செந்தில், முசிறி ரமேஷ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் சென்றனர். 

SCROLL FOR NEXT