Regional03

தங்கையின் கணவரை கொன்ற இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(26). தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவுசல்யா(25). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், அஷேசத்தில் உள்ள தாய் வீட்டிலிருந்த கவுசல்யாவிடம், அவர் காதல் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக, அவரது அண்ணன் ராஜ்குமார்(28) வாக்குவாதம் செய்துள்ளார். இதையறிந்த தினேஷ்குமார் நேற்று முன்தினம் அங்கு சென்றபோது, அவருக்கும் ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தினேஷ்குமாரை ராஜ்குமார் கட்டையால் தாக்கியதில் தினேஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரை(28) கைது செய்தனர்.

SCROLL FOR NEXT