பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் நீட் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு எம்.பி., தம்பிதுரை பரிசு வழங்கி பாராட்டினார். 
Regional01

பர்கூர் வேளாங்கண்ணி அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

பர்கூர் வேளாங்கண்ணி அகடாமி யில் பயின்று நீட் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு எம்.பி., தம்பிதுரை நினைவு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகடாமியில் 2021 நீட் தேர்வு எழுதிய அனைத்துமாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில், 720-க்கு 690 மதிப்பெண் பெற்ற மாணவர் மதன், மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். கவின் ஆதித்யா 646, வித்திஷா 631 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த அகடாமியில் தேர்வு எழுதியவர்களில் 42 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதற்கு, அகடாமியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

இதில், வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்று, மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந் திரன், பர்கூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஜெயபால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT