பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி, சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ் சாலை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. 
Regional01

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி சேந்தமங்கலத்தில் சாலைப் பணியாளர்கள் தர்ணா :

செய்திப்பிரிவு

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி, சேந்தமங்கலம் நெடுச்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணாவுக்கு, சங்க மாவட்ட தலைவர் சி.வேலு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ம.பாலசுப்பிரமணியம் பங்கேற்று கோரிக்கை தொடர்பாக பேசினார். சாலைப் பணியாளர்களை அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும். கரோனா பெரும் தொற்று பரவாமல் இருக்க சாலைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தர்ணாவில் வலியுறுத்தப்பட்டன.

சங்க மாநில பொருளாளர் ரா.தமிழ், துணைத் தலைவர் டி.ராஜமாணிக்கம், செயலாளர் சு.செந்தில்நாதன், பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT