Regional01

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

பழநி அருகே பெத்தநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கூலித் தொழி லாளி காமராஜ் (52). 2019-ல், தனது மனைவியின் முதல் கணவ ருக்கு பிறந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித் ததில், அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

பழநி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில் நீதிபதி புருஷோத்தமன், குற்றம் சாட்டப் பட்ட காமராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT