விருதுநகரைச் சேர்ந்த பாண்டி ராஜ், உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு: அருப்புக் கோட்டை நகர், சிவகாசி இ.புதூர், வில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய வளாகங்களில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முறையாக அனுமதி பெறப்படவில்லை.
எனவே, அச்சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘சிலைகள், கோயில்கள் இருப்பதால் மனுதாரருக்கு என்ன பிரச்சினை? மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்’ என்று கூறினர். அதன் பின் மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்று மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.