Regional01

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம் :

செய்திப்பிரிவு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் மாவட்ட வனத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு டி.குணசேகரன் என்பவர் திருச்சி வன சரகராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து மண்டல தலைமை வனப் பாதுகாவலர் என்.சதீஷ் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT